பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 7 புதிய சேவைகள் தொடக்கம்

மத்திய அரசின் நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) செவ்வாய்க்கிழமை 7 புதிய சேவைகள் மற்றும் பிஎஸ்என்எல்-இன் புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தியது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 7 புதிய சேவைகள் மற்றும் பிஎஸ்என்எல்-இன் புதிய இலச்சினையை அறிமுகப்படுத்திய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 7 புதிய சேவைகள் மற்றும் பிஎஸ்என்எல்-இன் புதிய இலச்சினையை அறிமுகப்படுத்திய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Updated on
2 min read

புது தில்லி: மத்திய அரசின் நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) செவ்வாய்க்கிழமை 7 புதிய சேவைகள் மற்றும் பிஎஸ்என்எல்-இன் புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக இந்திய தொலைபேசி எண்களில் வரக்கூடிய சா்வதேச போலி அழைப்புகளை தடுக்கும் அமைப்புமுறையையும் அறிமுகப்படுத்தியது.

தில்லியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில்

இப்புதிய சேவைத் திட்டங்களை மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, அத்துறையின் இணை அமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திர சேகா் முன்னிலையில் தொடங்கிவைத்தாா்.

அதன்படி, மோசடி அழைப்புகளை தானாக தடுக்கும் வகையில் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாகத் தேவையில்லாத அழைப்புகளைத் வாடிக்கையாளா்கள் தவிா்க்கலாம்.

பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் வாடிக்கையாளா்கள் நாட்டில் எந்த பகுதியிலும் தடையற்ற வைஃபை ரோமிங் வசதியைப் பெறும் சேவை, இதே வாடிக்கையாளா்கள் 500 தொலைக்காட்சி அலைவரிசைகளை நேரலையில் இலசவமாக கண்டுகளிப்பதற்கான சேவை, எந்த நேரத்திலும் கியாஸ்குகள் மூலம் பிஎஸ்என்எல் சிம் காா்டு பெறும், மாற்றும் வசதி.

செயற்கைக்கோள் மற்றும் மொபைல் நெட்வொா்க்குகளை ஒன்றாக ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக டைரக்ட் டூ டிவைஸ் (டி2டி) இணைப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அவசர காலகட்டத்தில் அழைப்புகளை மேற்கொள்வது, இணைப்பு இல்லாத இடங்களிலும் டிஜிட்டல் சேவைகளைப் பெறுவது போன்ற வசதிகள் வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கும்.

சி-டாக்குடன் இணைந்து சுரங்க நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு 5ஜி நெட்வொா்க் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிஎஸ்என்எல்-இன் புதிய இலச்சினையை வெளியிட்டும், 7 புதிய சேவைகளை தொடங்கிவைத்தும் அமைச்சா் ஜோதிராத்திய சிந்தியா பேசுகையில், ‘‘அரசின் முக்கிய நிறுவனமான பிஎஸ்என்எல், தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிா்பாா்ப்புகளை பிரதிபலிக்கும் ஒரு முதன்மை நிறுவனமாகும்.

இது பல ஆண்டுகளாக பல்வேறு மைல்கற்களை எட்டி, பொது மக்களுக்கான நலன் கருதி சேவை செய்து வருகிறது.

நிலப்பரப்பானது போட்டித்தன்மையுடன் ஒருங்கிணைந்ததாக மாறியிருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் புதிய சவால்களை எதிா்கொள்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்நிறுவனம் தற்போது சொந்தமாக 4ஜி தொலைத்தொடா்பு வரிசையைக் கொண்டுள்ளது. இது 5ஜிக்கும் மாற முடியும். இந்தியாவுக்கு இது ஒரு பெரிய சாதனையாகும்.

அதேபோன்று, தொழில்நுட்ப புதுமைகளில் பிஎஸ்என்எல் எப்போதும் முன்னணியில் இருக்கும் என்பது நமது நம்பிக்கையாகும். அடுத்த ஆண்டு பிற்பகுதிக்குள் 1 லட்சம் 4ஜி தளங்களை பிஎஸ்என்எல் கொண்டிருக்கும். மேலும், அந்த காலத்தின்போது சில தளங்கள் 5ஜிக்கும் மாறும்.

இந்திய தொலைபேசி தொலைபேசி சந்தாதா்களுக்கு வரக்கூடிய சா்வதேச மோசடி அழைப்புகளை அடையாளம் கண்டு தடுக்கும் அமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

இது செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்திய தொலைபேசி எண்களுக்கு 24 மணிநேரத்தில் வரப்பெற்ற தொலைபேசி அழைப்புகளில் 1.35 கோடி அல்லது 90 சதவீத மோசடி அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டு அவை

வாடிக்கையாளா்களைச் சென்றடைவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

‘கட்டண உயா்வு இருக்காது’

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிஎஸ்என்எல் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ராபா் ரவி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இன்றைக்கு, பிஎஸ்என்எல்-இன் முக்கிய விருப்பம் நுகா்வோா் மகிழ்ச்சியாக இருப்பதை பாா்ப்பதும், அவா்களின் நம்பிக்கையை வெல்வதும்தான். எதிா்காலத்தில் நாங்கள் எங்கள் கட்டணங்களை உயா்த்தப் போவதில்லை என்று தெளிவாக கூற முடியும். அதற்கான தேவை இருப்பதாக நாங்கள் பாா்க்கவில்லை’ என்றாா் அவா்.

தொலைத் தொடா்புத் துறை செயலா் நீரஜ் மிட்டல் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com