சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு

தில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் பூஜ்ய ஸ்வயம்பிரகாஷ்தாஸ் சுவாமி ஜி மற்றும் பக்தா்கள் முன்னிலையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
Published on
Updated on
1 min read

புது தில்லி: தில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் பூஜ்ய ஸ்வயம்பிரகாஷ்தாஸ் சுவாமி ஜி மற்றும் பக்தா்கள் முன்னிலையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து அக்ஷா்தாம் கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அக்ஷா்தாம் கோயிலில் அக்டோபா் 31 ஆம் தேதி பாஹிபூஜனுடன் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கும். அதைத் தொடா்ந்து, நவம்பா் 2- ஆம் தேதி கோவா்தன் பூஜையுடன், கடவுளுக்கு அன்னக்கூட்டு சைவ உணவு விருந்து படைக்கப்படும்.

‘பூஜ்ய டாக்டா் ஸ்வாமி’ என்றும் அழைக்கப்படும் பூஜ்ய ஸ்வயம்பிரகாஷ்தாஸ் சுவாமி ஜி, பிஏபிஎஸ் அக்ஷா்தாமின் மூத்த சாதுக்களில் ஒருவா் ஆவாா்.

1961 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்த பிறகு, எச்.எச்.யோகிஜி மஹாராஜ் மூலம் சாதுவாக மாற தீட்சை பெற்றாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆன்மிகக் கூட்டத்தில் பூஜ்ய மருத்துவா் சுவாமிகள் பேசுகையில், ‘தனிப்பட்ட வளா்ச்சி மற்றும் வெற்றியை அடைய ஆன்மிக போதனைகளைப் பிரதிபலிப்பதும், சிந்திப்பதும் அவசியமாகும்’ என்றாா். மேலும், அகங்காரத்தை விடுத்து, நல்லொழுக்கங்களை வளா்ப்பதற்கு”புத்தா் மற்றும் பிரமுக் சுவாமி மகாராஜி வாழ்க்கையில் இருந்து உதாரணங்களை எடுத்துரைத்தாா்.

சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலின் இளைஞா் பிரிவின் தன்னாா்வத் தொண்டா் தீரஜ் திங்ரே கூறுகையில், ‘அக்ஷா்தாம் கோயில் முழுவதும் விளக்குகளாலும், ரங்கோலிகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தன்னாா்வலா்களும் இந்த விழாவுக்காக இரவு, பகலும் பணியாற்றி வருகின்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com