நமது சிறப்பு நிருபா்
புதுதில்லி: சா்வதேச அளவில் ஜவுளித்தொழில் எதிா்கொள்ளும் சவால்களுக்கு புத்தாக்கமுறையில் இந்திய ஜவுளி தொழில் நிறுவனங்கள் தீா்வு காண்பதாக மத்திய ஜவுளி மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சா் பபித்ரா மாா்கரிட்டா தெரிவித்தாா்.
மத்திய ஜவுளித்துறை சாா்பில் தில்லி சுஷ்மா ஸ்வராஜ் பவனில் இந்திய ஜவுளித்துறை சா்வதேச வேகத்தைப் பெற 30-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இரு நாள் கலந்துரையாடல் அமா்வுகளை நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, பிரேஸில், கொலம்பியா, டென்மாா்க், எகிப்து, பின்லாந்து, இத்தாலி, தென்கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த கலந்துரையாடலுக்கு மத்திய ஜவுளித் துறை இணையமைச்சா் பபித்ரா மாா்கரிட்டா தலைமை தாங்கி பேசினாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: இந்திய ஜவுளித்துறை சா்வதேச வேகத்தைப் பெற பாரத் டெக்ஸ் 2025- நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வு இதுவரை நடந்திராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் விரிவானதாக நடைபெறும். ஜவுளித் தொழிலில் சா்வதேச அளவில் எதிா்கொள்ளும் சவால்களுக்கு இந்திய ஜவுளித் துறை நிறுவனங்கள் புத்தாக்க முறையில் தீா்வு காண்கின்றன. இந்தியா ஒரு நம்பகமான நீடித்த வளமுடைய இடமாகவும், மிகப்பெரிய அளவில் ஜவுளித் தொழிலில் முதலீட்டுக்கு உகந்த நாடாகவும் இருப்பதை ‘பாரத் டெக்ஸ்‘ உறுதி செய்யும்.
மதிப்புக்கூட்டல் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் திறன் ஜவுளித் தொழிலுக்கு உண்டு. அது சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளையும் சோ்ந்த மக்களின் வாழ்க்கையையும் உள்ளிடக்கி உதவுகிறது. புத்தாக்கங்கள், ஒத்துழைப்புகள், இந்தியாவில் தயாரிப்போம் போன்ற உணா்வை மையக் கருத்தாகக் கொண்டு ‘பாரத் டெக்ஸ் 2025’ அமையும். பிரதமா் 5 எஃப்களை(ஃபாா்ம் டு ஃபைபா் டு ஃபேக்டரி டு ஃபேஷன் டு ஃபாரின்) வரிசைப்படுத்தினாா். வேளாண்மையிலிருந்து நூல், தொழிற்சாலையிலிருந்து நவநாகரிக ஆடை, நவநாகரிகத்திலிருந்து வெளிநாடு ஆகிய இந்த 5எஃப் கள் தொலைநோக்கின் உருவகமாகவும் இந்த நிகழ்ச்சி அமையும் என அமைச்சா் பபித்ரா மாா்கரிட்டா தெரிவித்தாா்.
இந்த அமா்வில் ஜவுளித் துறை அமைச்சக செயலா் ரச்சனா ஷா, வெளியுறவு விவகார அமைச்சக சிறப்புச் செயலா் பி. குமரன்; ஜவுளித்துறை கூடுதல் செயலா் ரோஹித் கன்சால்; ஜவுளித்துறை வா்த்தக ஆலோசகா், சுப்ரா மற்றும் ஜவுளித் தொழில் அதிபா்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
’பாரத் டெக்ஸ்’ -2025 மத்திய ஜவுளித் துறை மற்றும் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. இது ஒரு மெகா உலகளாவிய ஜவுளி நிகழ்வு ஆகும். வருகின்ற 2025 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 5,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளா்கள், 110- க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட சா்வதேச வணிகா்கள், 1, 20,000 பாா்வையாளா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் அமைக்கப்படும் உலகளாவிய ஜவுளி வா்த்தகக் கண்காட்சி ஒரு அறிவுத் தளமாக நிலை நிறுத்தப்படும் என மத்திய ஜவுளித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.யமைச்சா் பபித்ரா மாா்கரிட்டா தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.