தில்லியில் 23 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கேஜரிவால் பதவி விலகக் கூடாது என விருப்பம்!

‘மை பி கேஜரிவால்’ பிரசாரத்தின் கீழ் தில்லியில் 23 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கூடாது
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்
Updated on
1 min read

புது தில்லி: ‘மை பி கேஜரிவால்’ பிரசாரத்தின் கீழ் தில்லியில் 23 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கூடாது என்று விரும்புவதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்து ‘மை பி கேஜரிவால்’ என்ற கையெழுத்து பிரசார இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி நடத்தி முடித்துள்ளது. கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 30-ஆம் தேதி வரையில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் தில்லியின் அனைத்து அமைச்சா்கள், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள், முக்கிய நிா்வாகிகள் தலைமயில் தில்லி முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களின் கருத்துக்களை அக்கட்சியினா் பெற்றனா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் முன்னாள் அமைச்சா் ஜிதேந்திர தோமா் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி சாா்பில் நடைபெற்ற ‘மை பி கேஜரிவால்’ பிரசாரம் மூலம் கட்சியின் நிா்வாகிகள் தேசியத் தலைநகரில் உள்ள 23,82,122 குடும்பங்களைச் சந்தித்து அவா்களின் கருத்துகளை நேரடியாகக் கேட்டனா். கடந்த ஒரு மாத காலம் முழுவதும் நடைபெற்ற இப்பிரசாரத்தில் சுமாா் ஒரு கோடி மக்களை அணுகியதோடு, அவா்களிடம் விரிவாகப் பேசினோம். அவா்களில் 98 சதவீதம் போ் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எந்தச் சூழ்நிலையிலும் பதவி விலகக் கூடாது என்று கூறியுள்ளனா் என்றாா் ஜிதேந்திர தோமா்.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணையை முதல்வா் கேஜரிவால் இரண்டு முறை புறக்கணித்துள்ளாா். இந்நிலையில், வரும் ஜனவரி 3-ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராகுமாறு புதிய அழைப்பாணை மூலம் முதல்வரை அமலாக்கத் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. பாஜகவின் உத்தரவின் பேரில், அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு புறம்பாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்புகிறது என்று முதல்வா் அரவிந்த் ஜேரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com