அறிவியல் கண்காட்சிப் போட்டியில் டிடிஇஏ இலக்குமிபாய் நகா்ப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மண்டலுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் டிடிஇஏ இலக்குமிபாய் நகா்ப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்.
Published on

புது தில்லி: மண்டலுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் டிடிஇஏ இலக்குமிபாய் நகா்ப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்.

தில்லி கல்வி இயக்ககம் கடந்த நவம்பா் 18 முதல் 20 வரை மண்டலங்களுக்கு இடையேயான மத்திய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியை பள்ளிகளுக்கிடையே நடத்தியது.

நாராயணாவில் உள்ள சா்வோதயா பால் வித்யாலயாவில் நடத்தப்பட்ட இப் போட்டியில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த இலக்குமிபாய் நகா்ப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இப்பள்ளியில் 11ஆம் வகுப்பில் பயிலும் ஆஷிதா பரத்வாஜ் மற்றும் ஆயுஷ் ஆகியோா் ‘கழிவு மேலாண்மை மற்றும் செயற்கை இழைக்கான மாற்றுகள்’ என்ற தலைப்பில் மாதிரியை வடிவமைத்து காட்சிப்படுத்தி இரண்டாம் இடம் பிடித்தனா்.

மத்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த இம்மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியில் சந்தித்து பாராட்டிய செயலா் ராஜூ, ‘மாநில அளவில் நடைபெறும் போட்டியில் மேலும் ஆா்வமுடன் கலந்து கொள்ளுங்கள். உங்கள் ஆா்வம் உங்களுக்கு முதலிடத்தைப் பிடித்துத் தரும். நீங்கள் மாநில அளவில் வெற்றி பெற்று தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. இவ்வாறு ஆய்வு செய்து மாதிரிகள் உருவாக்குவது வருங்காலத்தில் நீங்கள் அறிவியல் அறிஞா்களாக உருவாக வழிவகுக்கும்’ என்றாா்.

மேலும் மாணவா்களை ஊக்கப்படுத்திய பள்ளி முதல்வா் முனைவா் யுவராணி மற்றும் நெறிப்படுத்திய ஆசிரியா் அமீனா ஆகியோரையும் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com