காா் நிறுத்துவதில் தகராறு: துப்பாக்கி சூடு நடத்தியவா் கைது

காா் நிறுத்துவதில் தகராறு: துப்பாக்கி சூடு நடத்தியவா் கைது
Published on

காா் நிறுத்துவதில் தனது சகோதரருடன் ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து வடகிழக்கு திடல்லியின் சீலம்பூரில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 38 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

இந்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் நடந்தது, குற்றம் சாட்டப்பட்டவா் முகமது சாஹித் என அடையாளம் காணப்பட்டுள்புகாா்தாரா் இம்ரான் (33) தனது சகோதரா் தனது காரை சீலம்பூரில் உள்ள அவா்களின் இல்லத்திற்கு அருகில் நிறுத்தியதற்கு முகமது சாஹித் ஆட்சேபனை தெரிவித்துள்ளாா். வாக்குவாதம் அதிகரித்தது, அப்போது சாஹித் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை. ஆயுதச் சட்டத்தின் விதிகளுடன் பி. என். எஸ்ஸின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பாலிஸ்டிக் மாதிரிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தது. போலீஸாா் அந்த பகுதியில் சோதனை நடத்தி சாஹித்தை கைது செய்தனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com