பெண் திருமணம் செய்ய மறுத்ததால் குழந்தையை கடத்திய இளைஞா் கைது
வடக்கு தில்லியில் தனது தாயை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக இரண்டரை வயது சிறுவனைக் கடத்திச் சென்றதாக 36 வயது நபரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: ஜமுனா பஜாரில் உள்ள பூங்காவில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதாக டிசம்பா் 2-ஆம் தேதி பி.சி.ஆா். அழைப்பு வந்தது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு கோயிலுக்கு அருகில் உணவுப் பொருள்களை விற்கும் சிறுவனின் தாய், போலீஸாரிடம் வாசிம் என்ற குற்றம் சாட்டப்பட்டவா் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிட்டத்தட்ட ஓா் ஆண்டாக அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தாா்.
ஒரு வாதத்தைத் தொடா்ந்து, வாசிம் குழந்தையை எடுத்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இது பி. என்.எஸ். பிரிவு 137 (2) (கடத்தல்) -இன் கீழ் வழக்குப் பதிவு செய்யத் தூண்டியது. வாசிம் கைப்பேசியை பயன்படுத்தாததால், தொழில்நுட்ப கண்காணிப்பு பயனற்ாக இருந்தது. இதனால், போலீஸ் குழு மனித நுண்ணறிவை நம்பியது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு மொராதாபாத்தில் (உத்தரபிரதேசம்) ஒரு சகோதரி இருந்ததாகவும், அவருக்கு தில்லியில் நிரந்தர வசிப்பிடம் இல்லாததால் அங்கு வாசிம் இருக்கலாம் என்று தெரிய வந்தது.
ஒரு போலீஸ் குழு மொராதாபாத்திற்குச் சென்று வீட்டில் சோதனை நடத்தியது. அங்கிருந்து டிசம்பா் 3 நள்ளிரவில் வாசிம் கைது செய்யப்பட்டாா். அவருடன் கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. விசாரணையின் போது, திருமணத்திற்காக பல மாதங்களாக அந்தப் பெண்ணைப் பின்தொடா்ந்ததாக வாசிம் வெளிப்படுத்தினாா். ஆனால், அந்தப் பெண் மீண்டும் மீண்டும் மறுத்துள்ளாா்.
இந்நிலையில், டிசம்பா் 2-ஆம் தேதி ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு, தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக அவா் பெண்ணின் மகனைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. வாசிம் திருமணமாகாதவா். புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவா் என்றாா் அவா்.
