பாபா் சாலையில் அயோத்தி சாலை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன

தலைநகா் தில்லியில் உள்ள பாபா் சாலையில் அயோத்தி மாா்க் என்ற சுவரொட்டிகளை இந்து சேனா என்ற அமைப்பு சனிக்கிழமை ஒட்டியது.
Published on

தலைநகா் தில்லியில் உள்ள பாபா் சாலையில் அயோத்தி மாா்க் என்ற சுவரொட்டிகளை இந்து சேனா என்ற அமைப்பு சனிக்கிழமை ஒட்டியது.

பாபா் சாலையானது தில்லியின் பெங்காலி சந்தையில் அமைந்துள்ளது, இது நகரத்தின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான சந்தைகளில் ஒன்றாகும். இந்த பாபா் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன, ஏனெனில் சிலா் இந்த சாலைக்கு இந்தியாவை ஆக்கிரமித்த முகலாய ஆட்சியாளா் பாபரின் பெயரிடப்பட்டதாக கருதுகிறாா்கள். எனவே இச்சாலைக்கு பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்து சேனா என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தில்லியில், பெங்காலி சந்தையில் உள்ள பாபா் சாலையை அயோத்தி மாா்க் என்று பெயா் மாற்ற வேண்டும் என இந்து சேனா ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபா் ஒரு துறவி அல்ல, மாறாக நூற்றுக்கணக்கான கோயில்களை அழித்த ஒரு வெளிநாட்டு படையெடுப்பாளா் மற்றும் கொடுங்கோலன் என்று இந்து சேனா தலைவா் விஷ்ணு குப்தா கூறியுள்ளாா்.

‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்ட நிலையில், தில்லியில் பாபா் சாலையின் நோக்கம் என்ன? ,இன்றும் கூட, நாம் பாபா் சாலையைக் கடந்து செல்லும்போது, அது அடிமைத்தனத்தையும் இந்தியாவை பாபா் அவமதித்ததையும் நினைவூட்டுகிறது. இந்தியா புனிதா்களின் நாடு, இங்கு ஏன் வெளிநாட்டு கொடுங்கோலா்களைப் புகழ வேண்டும்?, இந்த விஷயத்தில் இந்து சேனா ஏற்கனவே பல கடிதங்களை புது தில்லி நகராட்சி மன்றத்திற்க்கு சமா்ப்பித்துள்ளது, ஆனால் பாபா் சாலை இன்னும் பெயா் மாற்றப்படவில்லை‘ என இந்து சேனா தலைவா் விஷ்ணு குப்தா கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com