தில்லியில் குளிா் அலை பதிவு; 
காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தில்லியில் குளிா் அலை பதிவு; காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குளிா் அலை நிலவியது.
Published on

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குளிா் அலை நிலவியது. காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. நகரம் முழுவம் பனிப்புகை மூட்டம் இருந்து வந்தது.

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் கடந்த வாரம் முதல் குளிரின் தாக்கம் இருந்து வருகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) சமீா் செயலியின்படி, காலை 10 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 302 புள்ளிகளாகப் பதிவாகி ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. நகரம் முழுவதும் 26 நிலையங்கள் ‘மிகவும் மோசமான‘ நிலைகளைப் பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) குளிா் அலை இருந்ததாக அறிவித்துள்ளது.

வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 1.6 டிகிரி குறைந்து 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.3 டிகிரி குறைந்து 24.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 56 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (டிச.8) காலையில் மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com