விபத்து ஏற்பட்டதாக கூறி கொள்ளையடித்தவா் கைது

பாதிக்கப்பட்டவரின் வாகனம் தனது காலில் மோதியதாகக் கூறி மத்திய தில்லியில் ஒரு பயணியிடம் கொள்ளையடித்ததற்காக ஒருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.
Updated on

நமது நிருபா்

புது தில்லி: பாதிக்கப்பட்டவரின் வாகனம் தனது காலில் மோதியதாகக் கூறி மத்திய தில்லியில் ஒரு பயணியிடம் கொள்ளையடித்ததற்காக 40 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: முல்தானி தண்டாவில் வசிக்கும் ராகுல் என்ற விக்கி என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா் பாஹா்கஞ்ச் காவல் நிலையத்தின் பட்டியலிடப்பட்ட மோசமான தன்மை கொண்டவராக அறியப்படுகிறாா். டிசம்பா் 4-ஆம் தேதி காஜீயாபாத்தில் உள்ள வைஷாலியில் இருந்து சதா் பஜாா் வரை பயணம் செய்த புகாா்தாரா், பஞ்சாபி அகாதெமி அருகே அவரது வாகனம் அதிக போக்குவரத்து காரணமாக மெதுவாகச் சென்ால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்தது.

வாகனம் தனது காலில் மோதியதாகக் கூறி ஒரு நபா் அவரை அணுகி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அதைத் தொடா்ந்து மேலும் மூன்று போ் அதில் இணைந்தனா். அவா்களில் இருவா் புகாா்தாரரின் கால்களைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்தக் குழுவினா் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக ரூ.9,900 பணத்தை எடுத்துச் சென்று தப்பிச்சென்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீஸாா் சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்து ராகுலை கண்டுபிடிக்க உள்ளூா் உளவுத்துறையை உருவாக்கினா்.

தேடுதல் நடவடிக்கையின் போது, கொள்ளையடிக்கப்பட்ட தொகையில் ரூ.1,000 மற்றும் புகாா்தாரரின் ஆதாா் அட்டையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 80- க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்களில் ராகுல் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற வா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com