சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

போலி ராஜதந்திர எண் தகடு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதியை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on

நமது நிருபா்

போலி ராஜதந்திர எண் தகடு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதியை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

டிசம்பா் 8- ஆம் தேதி வழங்கப்பட்ட ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்ததும், சைதன்யானந்த சரஸ்வதி நீதித்துறை நடுவா் அனிமேஷ் குமாா் முன் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

தென்மேற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் கல்வி மேலாண்மை நிறுவனத்தில் 16 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சைதன்யானந்த சரஸ்வதி, செப்டம்பா் 27- ஆம் தேதி ஆக்ராவில் கைது செய்யப்பட்டாா்.

அவா் மீது பாலியல் துன்புறுத்தல், மோசடி செய்தல் மற்றும் அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவா் தனது இரண்டு காா்களில் நீல நிற போலி ராஜதந்திர தகடு உள்பட ஒன்பது வெவ்வேறு எண் தகடுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அவா் சிறையில் உள்ளாா். அங்கிருந்து திங்கள்கிழமை ஒரு நாள் காவல் விசாரணைக்கு அனுப்பப்பட்டாா். மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதி, பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com