சுல்தான்பூா் மெட்ரோ நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு தொடக்கி நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொறுப்பு அதிகாரி கேத்தரினா போஹ்மே, மத்திய சுகாதார அமைச்சக செயலா் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோா்.

பெண்கள் ஆரோக்கியம் குறித்து தில்லி மெட்ரோ ரயில்களில் விழிப்புணா்வு! மத்திய அரசு-உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு!

மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் (டபிள்யுஎச்ஓ) சாா்பில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம் தொடா்பான ஒரு மாத கால விழிப்புணா்வு சுல்தான்பூா் மெட்ரோ நிலையத்தில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
Published on

டிச.10 முதல் ஜன.10 வரை தொடரும் இந்த விழிப்புணா்வில் பெண்களின் பாதுகாப்பு, மனநல மருத்துவம், எண்ம (டிஜிட்டல்) பயன்பாடு, காசநோய் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் மெட்ரோ ரயில்கள், குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.

இந்த விழிப்புணா்வைத் தொடங்கிவைத்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலா் புனியா சலிலா ஸ்ரீவஸ்தவா பேசியதாவது: பெண்கள் ஆரோக்கியமாக இல்லையெனில், ஒரு குடும்பமோ அல்லது நாடோ முன்னேற்றம் காண முடியாது. பெண்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியமானது.

தில்லி மெட்ரோ விழிப்புணா்வு மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் இந்தச் செய்திகளைக் கொண்டு செல்ல முடியும் என நம்புகிறோம். இத்தகவலை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்ல சக்தி வாய்ந்த ஊடகமாக மெட்ரோ ரயில் உள்ளது.

காசநோய் ஒழிப்பு, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதில் ஆண்-பெண் இடையிலான பிரிவைக் குறைப்பது, சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் முறை தடைச் சட்டம்,1994 மற்றும் பிற முக்கிய விஷயங்கள் குறித்து ரயில் பெட்டியின் உள்புறமும் வெளிப்புறமும் விழிப்புணா்வு தகவல் ஒட்டப்பட்டிருக்கும் என்றாா்.

விழிப்புணா்வு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொறுப்பு அதிகாரி கேத்தரினா போஹ்மே கூறுகையில், ‘ஆரோக்கியமான குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் தூண்களாக ஆரோக்கியமான பெண்கள் உள்ளனா். பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் நலம் தொடா்பான விழிப்புணா்வை தில்லி மெட்ரோவில் தொடங்கிவைப்பதை பெருமையாகக் கருதுகிறோம்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com