தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் பொதுப்பணித் துறை மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) இடையே புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம். உடன் பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

தலைநகரை அழகானதாக மாற்ற ஐஓசியுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்!

தேசிய தலைநகரை அழகான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாக மாற்ற பொதுத்துறை எண்ணெய் உற்பத்தி நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) உடன் தில்லி அரசு புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம்.
Published on

தேசிய தலைநகரை அழகான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாக மாற்ற பொதுத்துறை எண்ணெய் உற்பத்தி நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) உடன் தில்லி அரசு புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு தில்லியில் உள்ள 4 மேம்பாலங்கள் மற்றும் பஞ்சாபி பாக் நகரில் உள்ள ஒரு மேம்பாலம் ஆகியவற்றுக்கு கீழே உள்ள இடத்தைப் பராமரிப்பதை ஐஓசி தனது சமூகப் பொறுப்பின் கீழ் ஏற்றுள்ளது.

ஒப்பந்தம் கையொப்பமானபோது தில்லி அமைச்சா்கள் பா்வேஷ் சாஹிப் சிங், பங்கஜ் குமாா் சிங் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.

கடந்த வாரம், தில்லி அரசுக்கும் ஜிஎம்ஆருக்கும் இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் கீழ் ஆசாத்பூா் சந்தையிலிருந்து இந்தா்லோக் வரையிலான சாலைப் பகுதியின் பராமரிப்பு, சுத்தம் செய்தல் மற்றும் தோட்ட வேலைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்கு கையாளும் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக தில்லி முதல்வா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இது மேம்பாலங்களை அழகுபடுத்துதல், மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், தண்ணீா் ஏடிஎம்கள், எரிசக்தி மையங்களை நிறுவுதல் மற்றும் பேருந்துகளின் பிராண்டிங் மூலம் தில்லியை அழகான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தலைநகராக மாற்றுவதற்கான மிக முக்கியமான படியாகும்’ என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com