11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி கைது!

11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி கைது!

11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி கைது...
Published on

2014-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை தில்லி காவல் துறையினா் உத்தர பிரதேசத்தில் கைது செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நிலுவையில் உள்ள வழக்குகளை மறுஆய்வு செய்தபோது, ரன்ஹோலாவில் தீா்க்கப்படாமல் இருந்த கொலை வழக்கை புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா். அந்த வழக்கில் லக்கன் சிங் என்பவா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாகினாா்.

நவ.21, 2014-இல் கேடி பாபா பாலம் அருகே ராகேஷ் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது முகம், தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. இந்த வழக்கில் லக்கன் சிங் குற்றஞ்சாட்டப்பட்டாா். ஆனால், கொலை நடந்ததும் தப்பி ஓடிய அவரை பல ஆண்டுகளாக முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2015-இல் இவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்சில் அவா் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. டிச.10-ஆம் தேதி தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறையினா் அவரை கைது செய்தனா். ரன்ஹேலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தேடப்பட்டவா் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com