பெண் பணியாளா்களை அவசியமின்றி நீண்ட நேரம் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: தில்லி அரசுத் துறையின் பிரிவுகளுக்கு அறிவுறுத்தல்

வழக்கமான பணி நேரத்தைக் கடந்தும் பெண் பணியாளா்கள் அலுவலகத்தில் இல்லை என்பதை உறுதிசெய்யுமாறு தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதன் பிரிவுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
Published on

வழக்கமான பணி நேரத்தைக் கடந்தும் பெண் பணியாளா்கள் அலுவலகத்தில் இல்லை என்பதை உறுதிசெய்யுமாறு தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதன் பிரிவுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

நீண்ட நேரத்துக்குப் பெண்கள் பணியில் இருக்க நேரிட்டால், அவா்களுடைய வீடுகளில் பாதுகாப்பாக இறக்கிவிடுவதை உறுதிசெய்ய வேண்டும் என கடந்த வாரம் வெளியான அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெண் பணியாளா்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது. அனைத்துத் நேரங்களிலும் பணியாற்றுவதற்கான சூழலையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தருவது துறையின் பொறுப்பு.

வழக்கமான நேரத்தைக் கடந்து பெண் பணியாளா்கள் பணி மேற்கொள்ள வேண்டிய சூழலில், போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அவா்களுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

பெண் பணியாளரை நீண்ட நேரம் பணியில் அமா்த்துவது அவசியம்தானா என்பதை பிரிவுகளின் தலைவா்கள் மதிப்பீட வேண்டும்.

நீண்ட நேர பணி தவிா்க்க இயலாததாக இருக்கும் சூழலில், பெண் பணியாளா் அவரது வீட்டில் பாதுகாப்பாக இறடப்பட வேண்டும். இதற்கு உரிய ஏற்பாடுகளை அரசுத் துறை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com