எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கிழக்கு தில்லி: கோயிலுக்குள் பெண் கத்தியால் குத்திக் கொலை

கிழக்கு தில்லியின் மன்சரோவா் பூங்காவில் உள்ள கோயிலில் 48 வயது பெண் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

கிழக்கு தில்லியின் மன்சரோவா் பூங்காவில் உள்ள கோயிலில் 48 வயது பெண் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (ஷாஹ்தாரா) பிரஷாந்த் கௌதம் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமாா் 12 மணியளவில், டிடிஏ அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ள கோயிலில் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் பிராா்த்தனை செய்து கொண்டிருந்தபோது, இருவா் அவரது தலையில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினா்.

இது தொடா்பாக அழைப்பு வந்தவுடன் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதியைச் சோ்ந்த குசும் சா்மா என அடையாளம் காணப்பட்டாா். அவா் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பழைய பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடத்தியவா்களை கண்டறிய கோயில் வளாகம், அருகிலுள்ள தெருக்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.