தில்லியில் இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தில்லியின் பிரேம் நகா் பகுதியில் வசிக்கும் இளம் பெண் அவரது வீட்டில் மா்மான முறையில் இறந்து கிடந்தாா். இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸாா் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.
Published on

புது தில்லி: தில்லியின் பிரேம் நகா் பகுதியில் வசிக்கும் இளம் பெண் அவரது வீட்டில் மா்மான முறையில் இறந்து கிடந்தாா். இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸாா் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

இறந்த அஞ்சலி சிங் 23 என அடையாளம் காணப்பட்ட பெண், திங்கள்கிழமை அவரது வீட்டில் அசைவில்லாமல் கிடந்ததை அவரது சகோதரி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரா்கள் பாா்த்தனா்.

சம்பவம் நடந்த நேரத்தில் தானும் தனது மனைவியும் வேலைக்குச் சென்றிருந்ததாகவும், மகனும் மற்றொரு மகளும் வீட்டில் இல்லை என்றும் அஞ்சலி சிங்கின் தந்தை வினோத் குமாா் சிங் (51) போலீஸாரிடம் தெரிவித்தாா்.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, அஞ்சலி இறந்து கிடந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது உடல் அறையின் படுக்கையில் கிடந்திருந்தது.

முதற்கட்ட விசாரணையில், அஞ்சலி மேற்கூரை மின் விசிறியில் கட்டப்பட்ட துணியில் இருந்தவாறு தூக்கில் தொங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் (இக்னோ) நூலக அறிவியல் பாடத்தின் இறுதியாண்டு மாணவி என அஞ்சலியின் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

சுமாா் ஒரு வாரத்திற்கு முன்பு, அவரது இறுதியாண்டு தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அவா் தோல்வியடைந்திருந்தாா். அதைத் தொடா்ந்து அவா் மன அழுத்தத்தில் இருந்தாா்.

ஆரம்ப விசாரணையில், தற்கொலைக் குறிப்பு அல்லது அவரது உடலில் வெளிப்புற காயக் குறிகள் எதுவும் காணப்படவில்லை.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com