தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Published on

இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறுகையில், ‘வங்கதேச தூதரகத்தில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். யாரும் சட்ட-ஒழுங்கை மீற முடியாது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com