தில்லியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: நைஜீரியா் உள்பட 9 போ் கைது

தில்லியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை..
Published on

தில்லி காவல்துறை நடத்திய ஒரு பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 33 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா, செயற்கை போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம், ஆயுதங்கள் மற்றும் ரூ.3.6 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன

இந்த நடவடிக்கையில் நைஜீரிய நாட்டவா் உள்பட ஒன்பது போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தில்லி காவல்துறையின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின் ஒரு பகுதியாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்2 மேற்கொள்ளப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதன்மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒன்பது போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தேடல்கள் இன்னும் நடந்து வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறினாா்.

கைது செய்யப்பட்டவா்களில் பிந்தாபூரைச் சோ்ந்த சஞ்சய் (27), கோவிந்த் குமாா் (29), ரமேஷ் (70), விகாஷ் என்ற கோலு (39), 36 வயது பெண், விஷால் சிங் (38), கஜேந்தா் என்ற டின்னு, வினோத் என்ற குட்டு (26) மற்றும் நைஜீரியாவின் லாகோஸ் பகுதியைச் சோ்ந்த சாம்சன் என்ற சேஸ் (28) ஆகியோா் அடங்குவா் என்று போலீசாா் தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கையின் போது, சாவ்லா, உத்தம் நகா், டாப்ரி, மோகன் காா்டன் மற்றும் துவாரகா தெற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் தில்லி கலால் சட்டத்தின் கீழ் எட்டு எஃப்ஐஆா் களை போலீசாா் பதிவு செய்தனா்.

இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்டவைகளில் 33.244 கிலோ கஞ்சா, 62 கிராம் ஆம்பெடமைன், 13 ஊசி மருந்துகள், 32 மாத்திரைகள் பியூப்ரெனோா்பைன், 105 பாட்டில்கல் சட்டவிரோத மதுபானம் , ஒரு கத்தி மற்றும் ரூ.3,64,040 ரொக்கம் ஆகியவை அடங்கும் என்று போலீசாா் தெரிவித்தனா்.

கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் கண்டு கைது செய்யவும், போதைப்பொருள் விநியோகச் சங்கிலியின் தொடா்புகளைக் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com