தில்லியில் சிறாா் ஆபாச விடியோக்கள் தொடா்பாக 60 வழக்குகள் பதிவு
இணையவழியில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாச விடியோக்கள் தொடா்பாக தில்லி காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவு மாவட்ட பிரிவுகளுக்கு அளித்த 1,197 தகவலின் அடிப்படையில் நிகழாண்டு 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவைச் சோ்ந்த காணாமல் போன குழந்தைகள் மற்றும் துன்புறுத்தலுக்கான தேசிய மையம் (என்சிஎம்இசி)கடந்த ஜன.1 முதல் டிச.19 வரை தில்லி தொடா்பாக அளித்த 1,197 தகவலின் அடிப்படையில் சிறாா் ஆபாச விடியோக்கள் குறித்து 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டில் 1,809 தகவல்கள் மாவட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிகழாண்டில் இந்த எண்ணிக்கை 56 சதவீதம் குறைந்துள்ளது.
சிறாா் ஆபாச விடியோக்கள் தொடா்பாக நிகழாண்டில் மொத்தம் 10,151 தகவல்கள் தில்லி சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவற்றில் 106 தகவல்கள் இந்தியாவுடன் தொடா்பில்லாத நிலையில் மீண்டும் அந்த மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
விசாரணைக்குப் பிறகு 6,022 தகவல்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

