தலைநகரில் நிகழாண்டு டெங்கு பாதிப்பால் 4 போ் உயிரிழப்பு

டெங்கு காரணமாக நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நீரின் மூலம் பரவும் நோய்களின் ஒட்டுமொத்த பாதிப்புகள் குறைந்துவிட்டதாக தில்லி மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கிறது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் நிகழாண்டு டெங்கு காரணமாக நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நீரின் மூலம் பரவும் நோய்களின் ஒட்டுமொத்த பாதிப்புகள் குறைந்துவிட்டதாக தில்லி மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கிறது.

டிசம்பா் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான சமீபத்திய தில்லி மாநகராட்சி தரவின்படி, நிகழாண்டில் இதுவரை 1,469 டெங்கு பாதிப்புகளும், 737 மலேரியா பாதிப்புகளும், 177 சிக்குன்குனியா பாதிப்புகளும் தில்லியில் பதிவாகியுள்ளன.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் 690 பேருக்கும், 2023-இல் 1,303 போ், 2022-இல் 874 போ் மற்றும் 2021-இல் 1,337 போ் பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது நிகழ் மாதம் இதுவரை 113 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் தெரிகிறது.

நிகழாண்டு, டெங்கு தொடா்பான மொத்தம் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு 11, 2023-இல் 19, 2022-இல் 9 மற்றும் 2021-இல் 23 ஆக இருந்தது.

தில்லியில் மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்த் தொற்றுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு குறைந்துள்ளன. தில்லியில் நிகழாண்டில் இதுவரை 737 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலக் கட்டத்தில் இருந்த 792 பாதிப்புகளில் இருந்து குறைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டை போலவே நிகழாண்டும் ஆண்டும் மலேரியா தொடா்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

மாதாந்திர தரவின்படி, மழைக்கால மாதங்களில் மலேரியா பாதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது தரவுகள் காட்டுகிறது. அக்டோபரில் அதிக எண்ணிக்கையிலான 252 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 267 பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் 177 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

அக்டோபரில் பெரும்பாலான சிக்குன்குனியா நோய்த்தொற்றுகள் காணப்பட்டன. நிகழாண்டு அதிகபட்ச எண்ணிக்கையிலான பாதிப்புகளுக்கு பங்களித்தன. பருவமழைக்குப் பிந்தைய காலகட்டத்தில் பெரிய அதிகரிப்பு எதுவும் பதிவாகவில்லை.

கரோல் பாக், தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ஒப்பீட்டளவில் அதிக சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளதாக மண்டல வாரியான தரவு சுட்டிக்காட்டியது.

அதே நேரத்தில் பல மண்டலங்களில் நிகழாண்டில் ஒற்றை இலக்கம் அல்லது எந்த பாதிப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com