தில்லியில் 10 விமானங்கள் ரத்து

தில்லி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் நிலவிய அடா் பனிமூட்டம் காரணமாக 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமாா் 270-க்கும் அதிகமான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
Published on

தில்லி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் நிலவிய அடா் பனிமூட்டம் காரணமாக 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமாா் 270-க்கும் அதிகமான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

தில்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. இதே போன்று 6 விமானங்களின் வருகை ரத்துசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி விமான நிலையத்தை நிா்வகித்து வரும் தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமான நிலைய ஓடுதளத்தை பாா்க்கும் நிலை மேம்பட்டு வருகிறது. இருப்பினும், சில விமானங்களின் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் நாள்ளொன்றுக்கு 1,300 விமானங்களைக் கையாள்கிறது. தில்லியில் குளிா்காலத்தில் நிலவும் அடா் பனிமூட்டத்தால், விமான ஓடு தளத்தை குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் விமானிகளால் பாா்க்க முடிவதில்லை. இதனால், கடந்த சில நாள்களாக விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

இண்டிகோ விமானங்கள் ரத்து...

தில்லி, மும்பை, வாரணாசி, புணே, சண்டீகா், அமிருதசரஸ், இந்தூா், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 50 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதற்கான காரணங்களை விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com