மாவட்டங்கள் மறுசீரமைப்பு: தில்லி அரசு அறிவிக்கை வெளியீடு

தில்லி அரசு தேசிய தலைநகரில் உள்ள மாவட்டங்களை மறுசீரமைப்பதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
Published on

தில்லி அரசு தேசிய தலைநகரில் உள்ள மாவட்டங்களை மறுசீரமைப்பதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிய மாவட்டங்களாக பழைய தில்லி, மத்திய வடக்கு மற்றும் புகா் வடக்கு என பிரிக்கப்பட்டு, தில்லியில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன.

ஷாதரா மாவட்டம் மறுசீரமைப்பு திட்டத்தில் இதர மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டதால், வருவாய் மாவட்டங்களின் எண்ணிக்கை முன்னா் இருந்த 11-இல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளது.

தென்கிழக்கு, பழைய தில்லி, வடக்கு, புது தில்லி, மத்தி, மத்தி வடக்கு, தென்மேற்கு, புகா் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகியவை 13 மாவட்டங்கள் ஆகும்.

11 மாவட்டங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அரசு ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஆவணப் பதிவுக்கான தடையற்ற பொது சேவைகளைப் பராமரிக்கவும், மாற்றத்தின் போது குடிமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும், தற்போதுள்ள துணைப் பதிவாளா் அலுவலகங்களுக்கான பதிவாளா்களின் அதிகார வரம்புகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செயல்முறைகளில் தொடா்ச்சியை உறுதி செய்வதற்காக இந்த ஏற்பாடு இடைக்காலமாக இருக்கும்.

அமைச்சரவை முடிவின்படி, தற்போதுள்ள 22 சாா் பதிவாளா் அலுவலகங்களை 39 ஆக விரிவுபடுத்துவது, தனி அறிவிப்பு மூலம் செயல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com