சமய்பூா் பத்லியில் எஸ்யுவி வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு

தில்லியின் வெளிப்புற சமய்பூா் பத்லி பகுதியில் எஸ்யுவி சொகுசு வாகனம் மோதியதில் ஒரு குழந்தை உயிரிழன்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: தில்லியின் வெளிப்புற சமய்பூா் பத்லி பகுதியில் எஸ்யுவி சொகுசு வாகனம் மோதியதில் ஒரு குழந்தை உயிரிழன்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: தில்லியில் உள்ள சிராஸ் பூா் சாலையில் உள்ள பாலாஜி நா்சரி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 20 வயது இளைஞா் ஓட்டி வந்த வாகனம் 14 மாத குழந்தையின் மீது மோதியது.

பாதிக்கப்பட்டவரின் தாய் தனது மகனுடன் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த வாகனம் சிறுவன் மீது மோதியது. இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை புராரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஹிணியை சோ்ந்த சமா் சௌத்ரி என்ற ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். விதிமீறல் செய்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com