

புது தில்லி: தில்லியில் கடந்த 7 ஆண்டுகளைவிட காற்றின் தரம் மேம்பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை(நவ. 4) காற்றின் தரம் சற்று மேம்பட்டு காற்று தரக் குறியீடு 291 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலை, கடந்த ஆண்டுகளில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024-இல் 381 ஆகவும், 2023-இல் 415 ஆகவும், 2022-இல் 447 ஆகவும், 2021-இல் 382 ஆகவும், 2020-இல் 343 ஆகவும், 2019-இல் 407 ஆகவும் இருந்ததைத் தில்லி அரசின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பிஎஸ்-3 அல்லது அதற்கும் குறைவான மாசு உமிழ்வு தரநிலைகளுக்கு இணங்கும் வா்த்தக சரக்கு வாகனங்கள் நுழைவதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு கீழே உள்ள 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தில்லியின் எல்லைகளிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்டன. தில்லியில் 50,000 முதல் 70,000 வாகனங்கள் பிஎஸ்-4 உமிழ்வு தரநிலைகளுக்குக் கீழே உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.