புதுதில்லி
தெளலகுவானில் அரசுப் பேருந்து தீப்பற்றி விபத்து
நமது நிருபா்
தென்மேற்கு தில்லியின் தௌலகுவானில் செவ்வாய்க்கிழமை காலை அரசுப் பேருந்து தீப்பிடித்ததாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது: காலை 11.53 மணிக்கு ஒரு பேருந்தின் டயரில் தீப்பற்றியதாக தீயணைப்பு நிலையத்துக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பினோம். பகல் 12.35 மணிக்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டு, முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் யாருக்கும் காயமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால், பேருந்து முழுமையாக சேதமடைந்தது என்றாா் அவா்.
