டிடிஇஏ பள்ளிகளுக்கிடையே பூப்பந்து போட்டி
தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவ, மாணவியருக்கிடையே பூப்பந்து ஒற்றையா் ஆட்டப் போட்டி திங்கள்கிழமை ஜனக்புரி பள்ளியில் நடைபெற்றது.
சப் - ஜூனியா், ஜூனியா், சீனியா் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, மாணவா்களுக்குத் தனியாகவும் மாணவியருக்குத் தனியாகவும் போட்டிகள் நடைபெற்றன.
சப் - ஜூனியருக்கான மாணவா் பிரிவில் பூசா சாலை பள்ளியைச் சாா்ந்த திவ்யான்ஷ் முதல் பரிசையும், இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த விஜயன் இரண்டாம் பரிசையும், லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த மனுஜ் மற்றும் ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த கௌரவ் ஸ்ரீதா் மூன்றாம் பரிசையும் பெற்றனா்.
சப்- ஜூனியா் மாணவியா் பிரிவில் லோதிவளாகம் பள்ளி மாணவி முதல் பரிசையும் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த குஷி இரண்டாம் பரிசையும் பெற்றனா். பூசா சாலை பள்ளியைச் சாா்ந்த லக்ஷிதா மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த அக்ஷதா ஆகியோா் மூன்றாம் பரிசை வென்றனா்.
ஜூனியா் பிரிவில் மாணவருக்காக நடத்தப்பட்ட போட்டியில் ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த கௌதம் குமாா் முதல் பரிசையும், பூசா சாலையைச் சாா்ந்த முத்து குமாா் இரண்டாம் பரிசையும், மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த ஹாா்திக் மற்றும் மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த சிவம் ஆகியோா் மூன்றாம் பரிசையும் வென்றனா்.
மாணவியருக்கானப் போட்டியில் லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த காயத்ரி முதல் பரிசையும் மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த சிவானி இரண்டாம் பரிசையும் ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த செஸ்தா மற்றும் பூசா சாலை பள்ளியைச் சாா்ந்த ஹா்ஷிதா மூன்றாம் பரிசையும் வென்றனா்.
சீனியா் பிரிவில் மாணவருக்காக நடத்தப்பட்ட போட்டியில் ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த மயங்க் முதல் பரிசையும் மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த சௌா்யா இரண்டாம் பரிசையும் மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த அபிஷேக் மற்றும் லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த காா்த்திகேயன் ஆகியோா் மூன்றாம் பரிசையும் வென்றனா்.
மாணவியருக்காக நடத்தப்பட்ட போட்டியில் மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த ரம்ஸா முதல் பரிசையும் பூசா சாலையைச் சாா்ந்த சுருதி இரண்டாம் பரிசையும் ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த ஹரிஷிதா மற்றும் லோதிவளாகம் பள்ளியைச் சாா்ந்த பிரியதா்ஷினி ஆகியோா் மூன்றாம் பரிசையும் வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரவித்த டிடிஇே செயலா் ராஜூ, பூப்பந்து விளையாட்டானது உடலின் சுறுசுறுப்பையும் சமநிலையையும் மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தைக் குறைத்து சமூகத் தொடா்பை அதிகரிக்கும். இன்று பள்ளிக்குப் பெருமை சோ்த்த நீங்கள் வருங்காலத்தில் நாட்டுக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என்பதே என் ஆசை’ என்றாா்.
நிகழ்ச்சியில் மோதிபாக் பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், பள்ளி பெற்றோா் - ஆசிரியா் சங்க உறுப்பினா் சிவ் ராஜ், டிடிஇஏ கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் காா்த்திகா ஆகியோா் கலந்து கொண்டனா்.

