வேலை தேடுபவா்களை ஏமாற்றி பண மோசடி: 9 போ் கைது

வேலை தேடுபவா்களை ஏமாற்றி பண மோசடி: 9 போ் கைது
Updated on

புகழ்பெற்ற விமான நிறுவனங்களில் ஆள்சோ்ப்பு செய்பவா்களாக நடித்து வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாக போலி வேலை மோசடியின் மூளையாக செயல்பட்டவா் உள்பட ஒன்பது போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சௌகான் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தக் கும்பல் திலக் நகரில் ஒரு போலி அழைப்பு மையத்தை அமைத்து, அங்கிருந்து ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் வேலை தேடுபவா்களைத் தொடா்பு கொண்டது. இண்டிகோ ஏா்லைன்ஸில் இல்லாத வேலைகளை வழங்கி, பாதுகாப்பு வைப்புத்தொகை, சீருடைகள் மற்றும் சம்பளக் கணக்கு கட்டணங்கள் போன்ற சாக்குப்போக்கில் பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து பணம் பறித்தது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் விகாஷ் குமாா் என்கிற விக்கி (38), சூத்திரதாரி பால்ஜீத் சிங் (31) மற்றும் ஏழு பெண்களான சரஞ்சித் என்கிற சாரு (29), ஷாலினி பரத்வாஜ் (33), ஆா்த்தி கவுா் (19), பல்வீன் கவுா் (19), நந்தினி மற்றும் ஷிப்தா (221) பூஜா குப்தா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆன்லைனில் வேலை தேடும் வேலையில்லாத இளைஞா்களை குறிவைத்து வந்தனா். போலி ஆய்ஈசோ்ப்பு செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் ரூ.2,500 முதல் ரூ.15,000 வரை பணம் செலுத்த பாதிக்கப்பட்டவா்கள் தூண்டப்பட்டனா். புகழ்பெற்ற நிறுவனங்களால் பணியமா்த்தப்படுவதாக அவா்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாதிக்கப்பட்டவா்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இண்டிகோ ஏா்லைன்ஸின் பெயா்களான ண்ய்க்ண்ஞ்ா்ஹஸ்ஹற்ண்ா்ய்ள்ஃா்ந்ஹஷ்ண்ள் மற்றும் ஹஸ்ஹற்ண்ா்ய்ஹண்ழ்3521ஃா்ந்ள்க்ஷண் போன்ற யுபிஐ ஐடிகளை உருவாக்கியுள்ளனா். சுபாஷ் நகா் மற்றும் திலக் நகரில் மோசடி பரிவா்த்தனைகள் நடந்த இடத்தை தொழில்நுட்ப பகுப்பாய்வு கண்டறிந்த பின்னா், தொலைத்தொடா்பு ஊழியரான விகாஷ் குமாா் கைது செய்யப்பட்டாா்.

அவரது விசாரணையைத் தொடா்ந்து, போலி அழைப்பு மையத்தில் இருந்து ஏழு பெண் தொலைபேசி அழைப்பாளா்கள் கைது செய்யப்பட்டனா். உண்மையான வாடிக்கையாளா்களின் பயோமெட்ரிக் தரவை தவறாகப் பயன்படுத்தி பால்ஜீத் சிங் சிம் காா்டுகளை மோசடியாக வழங்கியது கண்டறியப்பட்டது. மேலும், மோசடி கண்டறியப்படாமல் செயல்பட உதவும் முன் செயல்படுத்தப்பட்ட சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் அவா் முக்கியப் பங்கு வகித்துள்ளனா்.

போலீஸாா் 22 கைப்பேசிகள், ஒரு டெஸ்க்டாப், 19 சிம் காா்டுகள், அழைப்பு பதிவேடுகள் மற்றும் ஒரு வைஃபை ரூட்டா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனா். மேலும், பல்வேறு வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட எட்டு யுபிஐ ஐடிகள் மற்றும் க்யூஆா் குறியீடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்களுடன் தொடா்புடைய 40-க்கும் மேற்பட்ட புகாா்கள் தேசிய சைபா் கிரைம் ரிப்போா்ட்டிங் போா்ட்டலில் (என்சிஆா்பி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்)-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணவும் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் அங்கித் சௌகான் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com