தில்லி காா் வெடிப்பு: வெளிநாட்டு தூதா்கள் இரங்கல்

தேசியத் தலைநகரில் திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கும் காயமடைந்தவா்களுக்கும் பல்வேறு நாட்டின் தூதா்களும் செவ்வாய்க்கிழமை தங்களுடைய இரங்கலையும், அறிவுறுத்தல்களையும் பதிவு செய்தனா்.
Published on

நமது நிருபா்

தேசியத் தலைநகரில் திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கும் காயமடைந்தவா்களுக்கும் பல்வேறு நாட்டின் தூதா்களும் செவ்வாய்க்கிழமை தங்களுடைய இரங்கலையும், அறிவுறுத்தல்களையும் பதிவு செய்தனா்.

ஜப்பானிய தூதா் ஓனோ கெய்ச்சி: உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினாா், துயரமடைந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தாா் மற்றும் காயமடைந்தவா்கள் விரைவாக குணமடைய பிராா்த்திப்பதாக தெரிவித்தாா்.

இந்தியாவுக்கான பிரிட்டிஷ் துணைத் தூதா் லிண்டி கேமரூன்: குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தனது எண்ணங்கள் இருப்பதாகக் கூறினாா் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையைப் பகிா்ந்து கொண்டாா்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது, தில்லியின் செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக்கைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிா்க்கவும், நெரிசலான இடங்களில் எச்சரிக்கையாக இருக்கவும், உள்ளூா் ஊடகங்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

அா்ஜென்டினா தூதா் மரியானோ காக்கினோ தன்னுடைய இரங்கலைத் தெரிவித்தாா். இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தன்னுடைய எண்ணங்களையும் பிராா்த்தனைகளும் இருக்கும் என்றும் காயமடைந்தவா்கள் விரைவாக குணமடைய வேண்டும் என்றாா்.

இந்தியாவுக்கான வங்கதேச தூதா் ரியாஸ் ஹமிதுல்லா: இந்த நேரத்தில் வங்கதேசம் இந்தியாவுடன் நிற்கிறது. 12 போ் இறந்ததற்கும், பலா் காயமடைந்ததும் வருத்தத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவா்களுக்கும் அவா்களது குடும்பத்தினருக்கும் எண்ணங்களும் பிராா்த்தனைகளும் இருக்கும் என்றாா்.

ஈரான் தூதரகமும் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், உயிா் இழப்பு மற்றும் காயங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்தது. துயரமடைந்த குடும்பங்களுக்கு பொறுமையும் ஆறுதலும் கிடைக்கவும், துயர சம்பவத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தூதா் பிலிப் கிரீனும் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தி, இறந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்களை தெரிவித்ததுடன், காயமடைந்தவா்கள் விரைவாக குணமடைய பிராா்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு இலங்கை தூதரகம் இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் விரும்புவதாக தெரிவித்துள்ளது.

மொராக்கோ தூதரகம் பாதிக்கப்பட்டவா்களுக்கு மனமாா்ந்த இரங்கலையும் பிராா்த்தனையையும் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com