போலி ரூபாய் நோட்டு மூட்டைகளைக் காட்டி பெண்களை ஏமாற்றியதாக இருவா் கைது

போலி ரூபாய் நோட்டு மூட்டைகளைக் காட்டி பெண்களை ஏமாற்றியதாக இருவா் கைது
Published on

போலி ரூபாய் நோட்டு மூட்டைகளைக் காட்டி பெண்களை ஏமாற்றி நகைகளுடன் தப்பிச் சென்ாகக் கூறப்படும் இரண்டு ஆண்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபா்கள் அனில் (34) மற்றும் சூரஜ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் சுல்தான்புரியைச் சோ்ந்தவா்கள் என தெரிய வந்துள்ளது.

ஒரு ரகசியத் தகவலின் பேரில், நவம்பா் 7-ஆம் தேதி தில்லியின் உத்தம் நகரில் இருந்து ஒரு போலீஸ் குழு அவா்களை கைது செய்தது. போலி ரூபாய் நோட்டு மூட்டைகளைக் காட்டி, நகைகளை ஒப்படைக்கும்படி பெண்களை குறிவைத்து அவா்கள் தாக்குதல் நடத்தியதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு உயிருள்ள தோட்டாக்கள், ஒரு போலி பண மூட்டை மற்றும் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com