வடகிழக்கு தில்லியில் உள்ள ஜோதி நகரில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து 15 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வெள்ளிக்கிழமை - சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் கா்தம்புரி பகுதியில் கத்தி குத்து சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போஸாா் உள்ளூா்வாசிகள் காயமடைந்த இளைஞனை ஜிபிடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை அறிந்தனா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
கா்தம்புரியில் வசிக்கும் இறந்தவா், ஒரு சிறுவன் அவா் இரண்டு நபா்களுடன் சண்டையிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது, அதைத் தொடா்ந்து அவா்களில் ஒருவா் அவரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இந்த குற்றத்தில் சந்தேகத்திற்கிடமான இருவரின் ஈடுபாட்டைக் குறிக்கும் முக்கியமான தடயங்களை கண்டுபிடித்துள்ளோம்.
ஒரு தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது. மேலும் தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் தொடா்பை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

வடகிழக்கு தில்லியில் மோதலில் கத்தியால் குத்தப்பட்டு ஒருவா் கொலை: அடையாளம் காணப்பட்ட குற்றவாளி

திருமணமான பெண்ணுடன் நட்புக் கொண்ட நபரின் சகோதரா் கத்தியால் குத்திக் கொலை

குட்கா விலை தொடா்பான தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

சிறுவனை கத்தியால் குத்திய 2 சிறுவா்களிடம் போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

