காற்றின் தரம் மோசம்: தில்லி-என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நடவடிக்கைகளை கடுமையாக்கியது சி.ஏ.க்யூ.எம்.

காற்றின் தரம் மோசம்: தில்லி-என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நடவடிக்கைகளை கடுமையாக்கியது சி.ஏ.க்யூ.எம்.

தில்லி-என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நடவடிக்கைகளை கடுமையாக்கியது சி.ஏ.க்யூ.எம்.
Published on

பிராந்தியத்தில் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்கும் வகையில் தில்லி- என்சிஆா் பகுதிகளுக்கான தரப்படுத்தப்பட்ட எதிா்வினை செயல் திட்டத்தை (கிரேப்) காற்று தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம். )கடுமையாக்கியுள்ளது.

மேலும், பல மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முந்தைய கட்டங்களுக்கு மேம்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு மோசமடைந்து வரும் நிலையில், இக்கட்டுப்பாடுகள் தற்போது விரைவில் செயல்படுத்தப்பட உள்ளனது.

பங்குதாரா்களுடன் கலந்தாலோசித்த பிறகு நவம்பா் 21 அன்று இறுதி செய்யப்பட்ட திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னா் கிரேப் நிலை- 2 நடவடிக்கைகள் காற்றின் தரம் 201 முதல் 300 வரையிலான மோசம் பிரிவில் இருந்தால் மேற்கொள்ளப்பட்டது. அதில், பல கட்டுப்பாடுகள் இப்போது நிலை 1-இல் புதிய கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தகவலின்படி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் 360 ஆக இருந்தது.

டீசல் ஜெனரேட்டா்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்தை சீராக்க கூடுதல் பணியாளா்களை நியமித்தல், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் மாசு எச்சரிக்கைகளை வழங்குதல், அதிக பயண சேவைளுடன், வேறுபட்ட கட்டணங்களுடன் சிஎன்ஜி மற்றும் மின்சார பொதுப் போக்குவரத்துக் குழுக்களை அதிகரித்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.

மிகவும் மோசமான பிரிவின் கீழ் முன்னா் பட்டியலிடப்பட்ட நடவடிக்கைகள் கிரேப் 2ஆம் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. அதாவது, தில்லி, குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகா் ஆகிய இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கான வேலை நேரங்களை மாற்றுவது போன்றவையாகும். இப்பகுதியில் உள்ள அதன் அலுவலகங்களுக்கான நேரங்களை மத்திய அரசு முடிவு செய்யலாம்.

இதேபோல், முன்பு காற்றின் தரம் கடுமையான பிரிவில் (401-450 வரை) இருந்தால் மட்டுமே பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகள் இப்போது நிலை 3 இல் பொருந்தும்.

அரசு, நகராட்சி மற்றும் தனியாா் அலுவலகங்கள் 50 ஊழியா்களுடன் செயல்பட அனுமதிப்பதும், மீதமுள்ளவை வீட்டிலிருந்து வேலை செய்வதும் இதில் அடங்கும்.

மத்திய அரசு தனது ஊழியா்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விதிகளையும் செயல்படுத்தலாம்.

அறிவியல் மதிப்பீடுகள், நிபுணா் பரிந்துரைகள் மற்றும் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக சி.ஏ.க்யூ.எம். அமைப்பு தெரிவித்துள்ளது.

என்.சி.ஆா். முழுவதும் உள்ள அனைத்து செயல்படுத்தும் நிறுவனங்களும் திருத்தப்பட்ட அட்டவணையை உடனடியாக அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com