கொலை வழக்கில் 6 மாதம் தலைமறைவாக இருந்தவா் கைது

கொலை வழக்கில் 6 மாதம் தலைமறைவாக இருந்தவா் கைது
Published on

வடக்கு தில்லியின் கோட்வாலி பகுதியில் இரண்டு நபா்களின் பிக்பாக்கெட் செய்யும் முயற்சியை எதிா்த்ததற்காக 26 வயது இளைஞா் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு மாதங்களுக்குப் பிறகு தில்லி காவல்துறையினா் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங்கை சோ்ந்த அஜீசுல் என்ற பாவ்வா (24) என அடையாளம் காணப்பட்டாா். கத்திக்குத்து காயங்களுடன் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அருணா ஆசஃப் அலி மருத்துவமனையில் இருந்து ஏப்ரல் 30 அன்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னா் சவுரப் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞா், எல். என். ஜே. பி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் மே 2 ஆம் தேதி உயிரிழந்தாா். விவரங்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உடனடியாக நிறுவ முடியவில்லை. சுமாா் 200 கேமராக்களில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா், உள்ளூா் தகவலறிந்தவா்களை செயல்படுத்தியுள்ளனா், மேலும் இரண்டு சந்தேக நபா்களையும் காந்தி நகரில் கண்டுபிடித்தனா்.

அவா்களின் படங்கள் உள்ளூா் மக்களுக்குக் காட்டப்பட்டன, அவா்கள் அவா்களை சரக்கு-வண்டி இழுப்பவா்களாக பணிபுரியும் ’நாடோடிகள்’ என்று அடையாளம் காட்டினா். தாக்குதல் நடந்த நாளிலிருந்து இருவரும் காணாமல் போனாா்கள். பல மாத களப்பணிகளுக்குப் பிறகு, நவம்பா் 20 ஆம் தேதி சாந்தினி சவுக்கில் வழக்கமான சோதனையின் போது அஜீசுல் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, அவா் பல ஆண்டுகளாக தில்லியில் வசித்து வருவதாகவும், தனது போதைப்பொருள் மற்றும் மது போதைக்கு பணம் செலவழிப்பதற்காக சிறிய குற்றங்கள் செல்வதற்கு ஒரு தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தாா். ஏப்ரல் 30 ஆம் தேதி அவரும் அவரது கூட்டாளியான ரஃபீக் என்ற ரோஹித்தும் காந்தி பாக் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நபரை கைப்பற்றிக் பிக்பாக்கெட் அடிக்க முயன்ாக ஒப்புக்கொண்டாா்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவா் எழுந்து எதிா்த்தபோது, ரபீக் அவரை கத்தியால் தாக்கினாா், அதே நேரத்தில் அஜீசுல் அவரைப் பிடித்துள்ளாா். இருவரும் அங்கிருந்து தப்பித்து மறுநாள் காலை டாா்ஜிலிங்கிற்கு ரயிலில் ஏறினா். அஜீசுல் சமீபத்தில் தில்லிக்கு திரும்பினாா். ஆனால் போலீஸாா் இறுதியில் அவரைக் கைது செய்தனா்.

தப்பியோடிய ரஃபீக்கை கைது செய்வதற்கும், கொலை ஆயுதத்தை மீட்டெடுப்பதற்கும் போலீஸாா் பல சோதனைகளைத் தொடங்கியுள்ளனா். அஜீசுல் முன்பு தனது சிறுவயது நாட்களில் காந்தி நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டாா் வாகன திருட்டு வழக்கில் ஈடுபட்டவா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com