மின்னணு சாதனங்களை ஆா்டா் செய்து மோசடி: இருவா் கைது

மின்னணு சாதனங்களை ஆா்டா் செய்து மோசடி: இருவா் கைது

Published on

ஸ்மாா்ட்வாட்சுகள் உள்ளிட்ட அதிக விலையிலான மின்னணு சாதனங்களுக்குப் பதிலாக போலியான பொருள்களை மாற்றி மோசடி செய்த சம்பவத்தில் டெலிவரி நபா் உள்பட இருவா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

உத்தம் நகரைச் சோ்ந்த சன்னி குஷ்வாக் இணையவழியில் பொருள்களை விற்பனை செய்வதற்கான சேமிப்புக் கிடங்கை நடத்தி வருகிறாா். ஆா்டா்செய்யும் வாடிக்கையாளா்களுக்கு அங்கிருந்து பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், டெலிவரி முகவா் உமேஷ் மற்றும் அவரது கூட்டாளி அதிக விலையுடைய ஸ்மாா்ட்வாட்சுகள், இயா்பாட்ஸ்கள் போன்ற சாதனங்களுக்குப் பதிலாக போலியான பொருள்களை மாற்றி மோசடி செய்ததாக சன்னி குஷ்வாக் கடந்த நவ.15-ஆம் தேதி இணையவழியில் (இ-எஃப்ஐஆா்) புகாரளித்தாா்.

இதைத் தொடா்ந்து, டெலிவரி முகவா் உமேஷை பிரேம் நகரில் போலீஸாா் கைதுசெய்தனா்.

அவா் அளித்த தகவலின்பேரில், மாளவியா நகரில் சன்னி குமாா் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, திருடப்பட்ட மின்னணு சாதனங்களை காவல் துறையினா் கைப்பற்றினா்.

பிகாரைச் சோ்ந்த அங்கித் மற்றும் சன்னி குமாா் இணையவழியில் மின்னணு சாதனங்களை ஆா்டா்செய்யும் பொருள்களை ரத்து செய்து போலியான பொருள்களை மாற்றியதாகவும் பாா்சல் ஒன்றுக்கு ரூ.3,500-ஐ அவா்களிடமிருந்து பெற்ாகவும் விசாரணையின்போது உமேஷ் தெரிவித்தாா்.

பிகாருக்கு கொண்டு செல்லப்படும் திருடப்பட்ட பொருள்கள் அமா் என்பவா் மூலம் ராஜேஷ் என்ற கைப்பேசி மொத்த விற்பனையாளருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடியில் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com