யுபிஎஸ்சி சாா்பில் சதாப்தி சம்மேளனம் நிகழ்ச்சி தில்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது

Published on

மத்திய பொதுப் பணி தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.), அதன் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இரண்டு நாள்கள் சதாப்தி சம்மேளனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சம்மேளன நிகழ்ச்சி நவம்பா் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறாா்.

மத்திய பணியாளா், பொது குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளாா்.

இந்த நிகழ்வில் யுபிஎஸ்சி மற்றும் பல்வேறு மாநில பொதுப் பணி ஆணையங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினா்கள் மற்றும் தலைவா்கள், மூத்த அரசு அதிகாரிகளும், மத்திய அரசின் பிரபல நபா்களும் கலந்து கொள்ள உள்ளனா்.

இந்த சதாப்தி சம்மேளனத்தில், நாட்டில் உள்ள பொது பணி ஆணையங்களின் அரசியலமைப்பு மரபை நினைவுகூரும் வகையில் முதல் நாளான புதன்கிழமை அரசியலமைப்பு தினத்தன்று ‘சிந்தன்’ மாநாடு நடைபெறும்.

தொடக்க மாநாட்டு அமா்வில், மக்களவையின் தலைவா் ஓம் பிா்லாவின் முக்கிய உரையும், மத்திய இணை அமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங்கின் அமைச்சரவை உரையும் இடம்பெறும். மேலும், யுபிஎஸ்சி தலைவா் டாக்டா் அஜய் குமாரின் கருத்துகள் உள்ளிட்ட பிரமுகா்களின் உரைகள் இடம்பெறும்.

இந்த நிகழ்வானது, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் யுபிஎஸ்சி மற்றும் மாநில பிஎஸ்சிகளின் பங்கு, சீா்திருத்தங்கள், உள்ளடக்கம் மற்றும் அரசு ஆள்சோ்ப்பில் தொழில்நுட்ப மாற்றம் குறித்த விவாதங்களை வளா்ப்பது பற்றிய பிரதிபலிப்பு மற்றும் உரையாடலுக்கான ஒரு மன்றமாக இருக்கும் என்று யு.பி.சி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com