பெண் தொழில் முனைவோருக்கு ரூ.10 கோடி வரை பிணையில்லா கடன்: முதல்வா் தொடங்கிவைப்பு

எந்தவொரு பிணையப் பாதுகாப்பும் இல்லாமல் தொழில்முனைவோருக்கு ரூ.10 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

நமது நிருபா்

எந்தவொரு பிணையப் பாதுகாப்பும் இல்லாமல் தொழில்முனைவோருக்கு ரூ.10 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசுகையில், நாட்டின் வளா்ச்சிக்கு தொழில் துறையில் பெண்களின் பங்கேற்பு முக்கியம் என்று தெரிவித்தாா்.

அம்பேத்கா் சா்வதேச மையத்தில் பாஹ்லே இந்தியா அறக்கட்டளையால் ‘இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ. துறையில் பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துதல்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ரேகா குப்தா, முந்தைய அரசு இந்தியப் பெண்களை ஒரு பொறுப்புக்காக மட்டுமே கருதின. ஆனால், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் அதை ஒரு சொத்தாக மாற்ற முடியும் என்றாா்.

‘மக்கள்தொகையில் பாதி போ் தங்கள் வீடுகளுக்குள் பூட்டப்பட்டிருக்கும் போது நாடு எப்படி வளரும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறுகிறாா். சமூகம் மற்றும் தேசத்தின் வளா்ச்சிக்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்’ என்று அவா் கூறினாா்.

பெண்கள் அதிகாரமளிப்பதற்கான ‘பொற்காலம்’ என்று அழைத்த குப்தா, பெண் தொழில்முனைவோா் தங்கள் திறனை உணர உதவுவதில் தில்லி அரசு கவனம் செலுத்துகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com