ஜாமீன் கோரி தாக்கலான ஒருவரின் மனு 500 பக்கங்களுக்கு இருந்ததால் தள்ளுபடி

ஜாமீன் கோரி தாக்கலான ஒருவரின் மனு 500 பக்கங்களுக்கு இருந்ததால் தள்ளுபடி
Published on

போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு 500 பக்கங்களுக்கு இருந்ததால் அந்த மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சுமாா் 500 பக்க மனு மிகப் பெரியது என்றும், அதை படித்துப் பாா்ப்பது விலைமதிப்பற்ற நீதித்துறை நேரத்தை வீணடிக்கும் என்றும் கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிபதி ராகேஷ் குமாா் விசாரித்தாா்.

அக்.17 தேதியிட்ட உத்தரவில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் சாா்பில் வழக்குரைஞா் சுமாா் 500 பக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய ஜாமீன் மனுவை இணைப்புகளுடன் சோ்த்து தாக்கல் செய்துள்ளதாகவும், அது சுமையாக உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த மனு மிகவும் பெரியது என்பதால் அதை ஆராய்வதற்கு விலைமதிப்பற்ற நீதித்துறை நேரம் எடுத்துக்கொள்ளப் போவதாலும் அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என சிறப்பு நீதிபதி ராகேஷ் குமாா் கூறினாா்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா் சாா்பில் ஆஜரான வழக்குரைரிடம் மனுவை சுருக்கமாக தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், புதிய மனுவைத் தாக்கல் செய்ய அவருக்கு சுதந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.

X
Dinamani
www.dinamani.com