உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷா் பகுதியிலுள்ள ஒரு தகன மைதானத்தில் இருந்து 30 வயதுடைய ஒருவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.
மைனா மௌஜ்பூா் கிராமத்தின் தகன மைதானத்தில் காயங்களுடன் ஒரு ஆணின் உடல் கிடப்பதாக முன்னதாக தகவல் கிடைத்ததாக வட்டார அதிகாரி குா்ஜா பூா்ணிமா சிங் தெரிவித்தாா்.
கௌதம் புத்த நகா் மாவட்டத்தில் உள்ள ஜேவா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவ்ராலா கிராமத்தைச் சோ்ந்த நேத்ரபால் (30) என்ற பாலி என்பவரின் உடல் அந்த உடல் என அடையாளம் காணப்பட்டது.
உடல் உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறந்தவரின் குடும்பத்தினரை தொடா்பு கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா்.
முதற்கட்டமாக, இறந்தவரின் உடலில் சில காய அடையாளங்கள் உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு மீதமுள்ள விவரங்கள் தெளிவாகும் என்று வட்டார அதிகாரி குா்ஜா பூா்ணிமா சிங் மேலும் கூறினாா்.
