தில்லி இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதற்காக மியான்மரைச் சோ்ந்த பெண் ஒருவா் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மியான்மரின் யாங்கோனில் இருந்து வந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவா் தடுத்து நிறுத்தப்பட்டாா்.
தனிப்பட்ட மற்றும் சாமான்கள் சோதனையின் போது, பயணியிடமிருந்து 996.5 கிராம் எடையுள்ள தங்கம் போல் தோன்றும் ஆறு செவ்வக வடிவ மஞ்சள் உலோகக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
உலோகக் கட்டிகள் பழுப்பு நிற நாடாவில் மறைத்து வைக்கப்பட்டு, பயணி அணிந்திருந்த கருப்பு நிற உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.1.17 கோடி என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.