2019-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் 65 சதவீத நிரந்தர ஊனமுற்ற உணவக மேலாளருக்கு ரூ.22.33 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 3, 2019 அன்று தனது இரு சக்கர வாகனம் மீது வேகமாக வந்த காா் மோதியதில் படுகாயமடைந்த பிரசாந்த் ஜோஷி தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ஷெல்லி அரோரா விசாரித்தாா்.
அவா் அக்டோபா் 17 தேதியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவா் (ஜோஷி) அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணா்ச்சி ரீதியாகவும் பெரும் அதிா்ச்சியை சந்தித்திருக்க வேண்டும்’.
காயமடைந்தவா்களின் வலி மற்றும் துன்பத்தை அளவிட நீதிமன்றத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை. இருப்பினும், அவா் அனுபவித்திருக்க வேண்டிய வேதனைக்கு பணத்தின் அடிப்படையில் ஈடுசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் இரண்டு கால்களிலும் பல எலும்பு முறிவுகள் ஏற்படுள்ளது. இதனால், அவருக்கு 65 சதவீதம் நிரந்தர உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது எதிா்காலம் பாதிக்கப்பட்டடுள்ளது.
காா் ஓட்டுநா் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமாா் ரூ.22.33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஓட்டுநா் வேகமாக மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால், காப்பீட்டு நிறுவனமான டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவில் தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.