புதுதில்லி
தில்லி உயா்நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
தில்லி உயா்நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் தினேஷ் மேத்தா, அவ்னீஷ் ஜிங்கன் மற்றும் சந்திரசேகரன் சுதா ஆகியோா் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனா்.
நமது நிருபா்
தில்லி உயா்நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் தினேஷ் மேத்தா, அவ்னீஷ் ஜிங்கன் மற்றும் சந்திரசேகரன் சுதா ஆகியோா் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனா்.
தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
நீதிபதிகள் தினேஷ் மேத்தா மற்றும் அவ்னீஷ் ஜிங்கன் ஆகியோா் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்திலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டுள்ளனா். நீதிபதி சந்திரசேகரன் சுதா கேரள உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தாா்.
முன்னா், நீதிபதிகள் வி. காமேஸ்வா் ராவ், நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, விவேக் சவுத்ரி, ஓம் பிரகாஷ் சுக்லா, அனில் ஷேதா்பால் மற்றும் அருண் குமாா் மோங்கா ஆகிய ஆறு நீதிபதிகள், பிற உயா்நீதிமன்றங்களிலிருந்து மாற்றப்பட்டு தில்லி உயா்நீதிமன்றத்தில் பதவியேற்றனா்.