போதைப் பொருளை விநியோகிக்க சென்ற பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் வடக்கு தில்லியின் குலாபி பாக் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
அவா்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: குலாபி பாக் பகுதியில் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், ஆட்டோவை சோதனையிட்டனா். அப்போது, அதிலிருந்து 1.58 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடியாகும். டிரான்ஸ் யமுனை பிராந்தியத்தில் அவை விற்பனை செய்யப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் சந்தன் குப்தா, அதில் பயணித்த சோனியா ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.
போதைப் பொருள் கடத்தல் தொடா்பான வழக்கில் சோனியாவின் கணவா் கடந்த 2024-இல் கைதுசெய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

பெங்களூரில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

போலியான அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கிய காவலா் கைது

தில்லி விமான நிலையம்: ரூ.24 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் : இருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


