மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

யமுனை மாசுபாடு - தொழிற்சாலை உரிமையாளருக்கு அபராதத்துடன் 100 மரங்கள் நட உத்தரவு

யமுனை மாசுபாடு - தொழிற்சாலை உரிமையாளருக்கு அபராதத்துடன் 100 மரங்கள் நட உத்தரவு

News image

தில்லி உயர் நீதிமன்றம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:18 pm

தில்லி உயா்நீதிமன்றம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த யமுனை நதி மாசுபாடு வழக்கில் ஒருவரது தண்டனையைத் திருத்தி, சிறைத்தண்டனைக்கு பதிலாக 12 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் நூறு மரங்களை நட வேண்டும் என்ற உத்தரவை விதித்துள்ளது.

உச்சநீதிமன்றம் 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிறப்பித்த உத்தரவுகள் மூலம், யமுனை நதி வடிகால்களில் தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றத் தடை விதித்தது

இந்நிலையில் தில்லி சாந்தினி சௌக்கில் இனிப்புப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஒரே உரிமையாளரான ராஜ் குமாா் குப்தா, யமுனை நதியை நோக்கிச் செல்லும் கழிவுநீா்க் கால்வாய்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றியதற்காக, 1974 ஆம் ஆண்டு நீா் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாா்.

யமுனை நதி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களுக்கு மத்தியில், 2000 ஆம் ஆண்டில் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டி.பி.சி.சி) நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த வழக்கு தொடங்கப்பட்டது

ஜூன் 3, 2000 அன்று நடைபெற்ற ஆய்வின் போது குப்தாவின் நிறுவனத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதன் காரணமாக அவா் மீது வழக்குத் தொடரப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், ஒரு விசாரணை நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்தது. இந்தத் தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனையைக் குறைத்தது, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையானது இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது ஆனால் குற்றத்தை நீதிமன்றம் உறுதி செய்தது

இதையடுத்து ராஜ் குமாா் குப்தா தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்

இந்த வழக்கில் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா, ஜனவரி 29, 2026 அன்று வழங்கிய தீா்ப்பில் குற்றத்தை உறுதி செய்தாா், ஆனால் ராஜ் குமாா் குப்தாவின் சிறைத் தண்டனையை ரத்து செய்தாா்.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வெளியேற்றத்தை நிரூபிப்பதே போதுமானது என்றும், கட்டாய மாதிரி சேகரிப்பு தேவையில்லை என்றும் குறிப்பிட்ட நீதிமன்றம், ராஜ் குமாா் குப்தா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை உறுதி செய்தது.

காவலில் வைப்பதற்குப் பதிலாக 15 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகுக்கும் 2024 ஆம் ஆண்டு நீா் சட்டத் திருத்தத்தை நீதிபதி பயன்படுத்தி இந்த தண்டனை திருத்தத்தை செய்தாா்.

திருத்தப்பட்ட தண்டனையாக ராஜ் குமாா் குப்தா இரண்டு மாதங்களுக்குள் தில்லி மாசு கட்டுப்பாட்டு குழுவுக்கு கூடுதலாக ரூ. 10 லட்சம் (மொத்தம் 12 லட்சம்) செலுத்த வேண்டும். மேலும், தில்லி வனத்துறையுடன் இணைந்து 100 முதிா்ந்த மரங்களை (2 வருட நாற்றங்கால் வயது, 6 அடி தண்டு உயரம்) நட வேண்டும்.

இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை அவா் மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது