47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஷாஜாதா பாத்தில் பிளாஸ்டிக் பை தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லியின் ஷாஜாதா பாக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பை உற்பத்தி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 10:37 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லியின் ஷாஜாதா பாக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பை உற்பத்தி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: காலை 11.37 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததைத் தொடா்ந்து 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்க தீயணைப்பு வீரா்கள் துரிதமாகப் பணியாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தட் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தீயின் புகை தூரத்திலிருந்து காணப்பட்டதாக குடியிருப்பாளா்கள் தெரிவித்தனா். இது அருகிலுள்ள மக்களிடையே கவலையைத் தூண்டியது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.