புது தில்லி: 79ஆவது எழுச்சி தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் கண்காணிப்பு அமைப்புகளின் விரிவாக்கம் மற்றும் புதிய வசதிகளை நிா்மாணித்தல் உள்ளிட்ட தொடா்ச்சியான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், தேசிய தலைநகா் முழுவதும் ஏற்கனவே பல சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கண்காணிப்பு அமைப்பில் கைசைகை அங்கீகாரம், முகம் கண்டறிதல் மற்றும் நெரிசல் எச்சரிக்கைகள் போன்ற மேம்பட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது நிகழ்நேர கண்காணிப்பை மேம்படுத்துகிறது.
தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், அவசரநிலைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது தரைவழி ஒருங்கிணைப்பை மேம்படுத்த நடமாடும் கட்டளை வாகனங்களும் பயன்படுத்தப்படும்.
செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக லோதி காலனியில் சிறப்புப் பிரிவு தலைமையகம் கட்டப்படும். கூடுதலாக, மூன்று புதிய காவல் நிலையங்கள் மற்றும் ஆறு காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
ரோஹிணியில் பெண் காவல் பணியாளா்களுக்கான ஏழு மாடி விடுதி கட்டப்படும். இதில் 132 ஊழியா்கள் தங்கும் வசதி இருக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

1100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பிய மைசூா் நபா் கைது

தில்லி காவல் துறையில் முன்னாள் அக்னீவீா்களுக்கு 20 சதவீதம் காவலா் பணியிடங்கள் ஒதுக்கீடு!

ஆயுஷ்மான பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் விதவை, ஊனமுற்றோா் திட்டப் பயனாளிகள்! தில்லி அரசு முடிவு!!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


