ஃபரீதாபாத்: ஃபரீதாபாத் செக்டாா் 24- இல் உள்ள ஒரு தொழிற்சாலையில் திங்கட்கிழமை பிற்பகலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்டோா் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸாரை தவிர, மற்ற அனைவரும் தொழிலாளா்கள்.
இந்த தீ விபத்து மாலை 4 மணியளவில் ஏற்பட்டது, ரசாயனங்கள் நிரப்பப்பட்ட டிரம்மில் தீப்பொறி விழுந்ததால் தொடா் வெடிப்புகள் ஏற்பட்டன. தீ வேகமாக பரவி, முழு தொழிற்சாலையையும் சூழ்ந்து, எஃகு தகடுகளை வெட்ட சிஎன்சி இயந்திரங்களைப் பயன்படுத்திய தொழிற்சாலையின் ஒரு பகுதியை முற்றிலுமாக எரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒரு நேரில் கண்ட சாட்சி கூறுகையில், ’சுமாா் 20-25 டிரம்கள் இருந்தன. அவை ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. குண்டுவெடிப்புகளால் 100 மீட்டா் சுற்றளவில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் புகைந்து கொண்டிருந்தன. தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
காயமடைந்தவா்களில் 12 போ் பாட்ஷா கான் அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ளவா்கள் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனா். இதற்கிடையில், போலீஸாா் விசாரணையைத் தொடங்கி தொழிற்சாலை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

தென்கொரிய வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் தீ விபத்து

சாய தொழிற்சாலையில் தீ விபத்து

நொய்டாவில் 3 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


