வெடிகுண்டு அச்சுறுத்தல்களைப் பெற்ற பிறகு, தில்லி மெட்ரோ நிலையங்கள் உள்பட அனைத்து முக்கிய நிறுவனங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாா் பலப்படுத்தினா். தி ல்லி பனேகா காலிஸ்தான்‘ என்று குறிப்பிட்ட மின்னஞ்சல்கள், அடுத்த 3 நாள்களுக்குள் தில்லி ராணுவ பள்ளி, செங்கோட்டை மற்றும் மெட்ரோ நிலையங்களில் குண்டுவெடிப்புகள் ஏற்படும் என்று எச்சரித்தன. ராணுவப் பள்ளியில் பிற்பகல் 1.11 மணிக்கும், விதான் சபாவில் பிற்பகல் 3.11 மணிக்கும், செங்கோட்டையில் இன்று காலை 9.11 மணிக்கும் குண்டுவெடிப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.