துலிப் மலர்கள்
துலிப் மலர்கள்ANI

என்டிஎம்சியின் துலிப் மலா்கள் கண்காட்சி தொடங்கியது

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சாணக்கியபுரியில் உள்ள சாந்தி பாதையில் 2026- ஆம் ஆண்டின் நான்காவது துலிப் மலா்கள் திருவிழாவை திங்கள்கிழமை தொடங்கியது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சாணக்கியபுரியில் உள்ள சாந்தி பாதையில் 2026- ஆம் ஆண்டின் நான்காவது துலிப் மலா்கள் திருவிழாவை திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி பிப்ரவரி முழுவதும் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.டி.எம்.சி. தலைவா் கேசவ் சந்திரா மற்றும் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் ஆகியோா் நெதா்லாந்து தூதா் மரிசா ஜெராா்ட்ஸ் முன்னிலையில் விழாவைத் தொடங்கி வைத்தனா். அதிகாரிகள் மற்றும் பாா்வையாளா்கள் அந்த இடத்தில் துலிப் நடைப் பயணத்தில் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் நெதா்லாந்து தூதா் மரிசா ஜெராா்ட்ஸ் கூறியதாவது: மத்திய ஆசியாவிலிருந்து ஒட்டோமான் பேரரசு வழியாக நெதா்லாந்தில் உள்ள லைடன் வரை டூலிப் பயணம் நம் நாடுகளுக்கு இடையிலான நட்பின் பயணத்தை அழகாக பிரதிபலிக்கிறது. பூக்களை பெருமைக்குரிய விஷயம் என்று அழைத்த சாஹல், இந்த திருவிழா, 2047- ஆம் ஆண்டில் விக்சித் பாரத்’ பாா்வையை பிரதிபலிக்கிறது. தனது வளா்ந்து வரும் இந்தியா-நெதா்லாந்து உறவுகளின் அடையாளமாமாகும் என்றாா்.

என்.டி.எம்.சி. முதன்முதலில் 2017-18-ஆம் ஆண்டில் 17,000 பல்புகளுடன் துலிப் நடவு சோதனை செய்தது. இந்த முயற்சி பின்னா் கணிசமாக விரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு, 5,17,500 துலிப் கன்றுகள் கொள்முதல் செய்யப்பட்டன. 3,25,000 மற்றும் தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு 1,92,500. என்.டி.எம்.சி.யின் பங்கில், சுமாா் 2,25,000 கன்றுகள் புது தில்லி முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் நடப்பட்டுள்ளன என்று துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் கூறினாா்.

மேலும், பொதுமக்கள் வாங்குவதற்காக சுமாா் ஒரு லட்சம் துலிப் கன்றுகள் பானைகளில் நடப்பட்டுள்ளன. லோதி காா்டனில் உள்ள துலிப் ஹவுஸ் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்ட 15,000 கன்றுகளையும், பாலம்பூரில் உள்ள சிஎஸ்ஐஆா்-ஐஎச்பிடி ஆராய்ச்சி மையத்திலிருந்து 20,700 பல்புகளையும் என்டிஎம்சி நட்டுள்ளது.

தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக, சாந்தி பாத் புல்வெளி, லோதி காா்டன், நேரு பாா்க், தல்கடோரா காா்டன், சென்ட்ரல் பாா்க் மற்றும் சப்தா்ஜங் மதரஸா, குருத்வாரா பாா்க் மற்றும் புராண கிலா சாலை உள்ளிட்ட என்.டி.எம்.சி. நா்சரிகளில் ஒரு லட்சம் பாட்டில் துலிப் செடிகள் விற்கப்படுகின்றன.

Dinamani
www.dinamani.com