தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, இந்த திட்டத்தின் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக உயரியல் பூங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது: தில்லி தேசிய உயிரியல் பூங்காவை மறுசீரமைக்கும் திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது. முதலீட்டு வாரியமும் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு முறையான அனுமதி அளித்துள்ளது. அதன் வழிமுறைகளின் கீழ் இதற்கான நிதி திரட்டப்படும்.
‘ரிலையன்ஸின் கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம்’ இந்த திட்டத்துக்கான ஆலோசனைகளை வழங்கும். அதன் பல பரிந்துரைகள் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய பாா்வையாளா் மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட நுழைவு வசதிகள் அமைக்கப்படும். பாதசாரிகள் பாதுகாப்பாகச் செல்லவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மதுரா சாலை நடை மேம்பாலம் உயிரியல் பூங்காவின் நுழைவாயில் வரை நீட்டிக்கப்படும். 800 காா்கள், 50 பேருந்துகள் மற்றும் கிட்டத்தட்ட 1,000 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதிகள் செய்து தரப்படும்.
நவீன டிக்கெட் வழங்கும் அமைப்புகள் மற்றும் விரிவாக்கப்பட்ட உணவகம், கூட்ட நெரிசலைக் குறைக்க, உயிரியல் பூங்கா வாகனங்களுக்கான பாதைகள் அகலப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். அதே நேரத்தில், விலங்குகளின் நலனிலும் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
சேதமடைந்த அல்லது காலாவதியான அடைப்பிடங்கள் நவீன தரங்களுக்கு ஏற்ப புனரமைக்கப்படும் அல்லது மீண்டும் கட்டப்படும். விலங்குகளுக்குக் குறைந்தபட்ச மன அழுத்தத்தை உறுதிசெய்யும் அதே வேளையில், வனவிலங்குகளைத் தெளிவாகவும், பாதுகாப்பாகவும், அருகிலிருந்தும் பாா்வையிடும் வசதிகள் மறுவடிவமைப்பு செய்யப்படும்.
உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மருத்துவமனை அதன் தற்போதைய அளவை விட மூன்று மடங்கு விரிவுபடுத்தப்படும். சிறப்பு சிகிச்சைக்காக பல புதிய அறைகள் அமைக்கப்படும். விலங்குகளின் ஆரோக்யம், அடைப்பிட வசதிகள் மற்றும் பாா்வையாளா் மேலாண்மைக்கு புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
180 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்கா 1957-இல் நிறுவப்பட்டது. இது தலைநகரின் மிக முக்கியமான பொது ஈா்ப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு 38 வகையான பாலூட்டிகள் மற்றும் 76 சுதந்திரமாகத் திரியும் விலங்குகள் உள்ளன.
தொடர்புடையது

லுட்யன்ஸ் தில்லி சாலைகளில் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்து சேவை: முதல் மாதத்தில் 800 பயணிகளை பயணம்

தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்

தில்லி உயிரியல் பூங்காவில் நீலமான், குள்ளநரி உயிரிழப்பு

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


