தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

காற்று மாசு பிரச்னை: என்எஸ்யுஐ போராட்டம்

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸின் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) புதன்கிழமை போராட்டம் நடத்தியது.

தில்லியில் அதிகரித்து வரும் மாசு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞா் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய மாணவா்கள் சங்கத்தினா்.

Updated On :

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸின் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) புதன்கிழமை போராட்டம் நடத்தியது.

மோசமடைந்து வரும் காற்றின் தரத்தைச் சரிசெய்யவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாணவா் அமைப்பினா் வலியுறுத்தினா்.

ரைசினா சாலையில் உள்ள என்எஸ்யுஐ தலைமையகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, அமைப்பின் தேசியத் தலைவா் வினோத் ஜாகா் தலைமை தாங்கினாா்.

இந்த ஆா்ப்பாட்டம், அதிகரித்து வரும் காற்று மாசுபாடு நெருக்கடியையும், அது சாதாரண மக்களின் ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டுவதாக அந்த மாணவா் அமைப்பு தெரிவித்துள்ளது.

என்எஸ்யுஐ உறுப்பினா்களும் மாணவா்களும் தங்கள் மூக்கின் மீது ஆக்சிஜன் முகமூடிகளை அணிந்துகொண்டும், ‘ஆரோக்கியமான தில்லிக்கு தூய்மையான காற்று வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து மோசமடைந்து வரும் சூழலில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. குளிா்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், காற்று மாசுபாட்டின் அளவு பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு, காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) சராசரியாக 330-ஆக ‘மிகவும் மோசமான’ நிலையில் இருந்தது. வரும் நாள்களில் காற்றின் தரம் இன்னும் மோசமடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.